உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
ஆத்தூர் சீலியம்பட்டி கல்வராயன் மலை உடன் கோயில் கிராமங்களில் அரசியலமைப்பு சட்ட உரிமை கல்வி மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் சார்பாக குழந்தை தொழிலாளர் இல்லாத சமுதாயத்தை படைக்க வேண்டும்.என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.மனித உரிமை கல்வி நிறுவ ன அமைப்பாளர் ராமு, குழந்தைகள் அமைப்பாளர் கவிதா, மலை கிராம அமைப்பாளர் சிந்திமதி பெண்கள் விவசாய சங்க அமைப்பாளர் ஜகதாம்பால், மலர்க்கொடி,அமிர்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலை கிராமங்களில் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு, குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளது.அரசு அதை கட்டுபடுத்த வேண்டும்.கிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.மலை கிராம குழந்தைகளுக்கு கொரோனா கால கட்டத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

