கோவில் திருப்பணிக்கு நிதி உதவி
ராமநாதபுரம் ஏப்-26l
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தின் முன்புறம் அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயம் மிகவும் பழுதடைந்ததின் காரணமாக அக்கோவிலுக்கு திருப்பணி செய்திட ஆன்மீக பெருமக்கள் அவர்களால் இயன்றபொருள் உதவி மற்றும் கட்டுமான பொருட்கள் நிர்வாகத்தினரிடம் வழங்கிவருகிறார்கள்.இதன் அடிப்படையில் அரசு விளையாட்டு மைதானத்தின் அருகே வேலு மாணிக்கம் ஹாக்கி மைதானத்தின் மிக அருகில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்திட நன்கொடையாக ரூ.1 லட்சத்தை திருப்பணி நிர்வாகத்தினரிடம் ராமநாதபுரம் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கேணிக்கரை பகுதியில் அமைந்துள்ள வேல் மருத்துவமனை மருத்துவர் மலையரசு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் லீலாவதி தம்பதியினரின் புதல்வி செல்வி. ஜோத்ஸ்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1 லட்சத்தை மூத்த மருத்துவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளருமான மருத்துவர் மலையரசு இன்று வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
