காட்டுக்குள் நடந்து சென்ற கிருஷ்ணகிரி எம்.பி. சாலை அமைக்க ஏற்பாடு...!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதிக்கு உள்ளது.
இங்கு மலைவாழ் மக்கள் வாழ்த்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை . கிராமங்களுக்கு
செல்ல வேண்டும் என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் காட்டுப்பகுதிக்குள் நடந்து தான் செல்ல வேண்டும் .
காட்டுப் பகுதியில் வன விலங்குகள் யானைகள் மற்றும் ஆபத்தான மிருகங்கள் நடமாடிக் கொண்டு உள்ளது .
தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் அவர்களில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து டாக்டர் செல்லக்குமார்
அதை உடனடியாக செயல்படுத்த இன்று வன அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலை அலுவலர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வனப்பகுதிக்குள் ஐந்து கிலோமீட்டர் நடந்துசென்று சாலைகளை பார்ப்பதற்கு ஆய்வு செய்தனர்
.பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார் தனது நிதியிலிருந்து உடனடியாக சாலை வசதி செய்து தர வாக்குறுதி அளித்தார் .
பொதுமக்கள் சந்தோசத்துடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் லலித் ஆண்டனி, விவசாய அணி மாவட்ட தலைவர் ஹரிஷ் அன்வர் ரகுமான் சைபுதீன் இளைஞரணி கீர்த்தி வட்டார தலைவர் மாது,
பிரபு மாவட்ட வன உயிரின காப்பாளர், சீதாராமன் ரேஞ்சர் வனவர் கே சஞசய்
மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்...
