மேட்டுப்பாளையம் காவல்துறை நண்பர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டது.

 மேட்டுப்பாளையம் காவல்துறை நண்பர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டது.


காரமடை பாரதி எஸ்டேட்ஸ் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கொரானா பேரிடர் காலத்தில் இரவு பகல் பாராது மக்களை காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள காவல்துறை நண்பர்கள் ,ஊர்க்காவல் படை நண்பர்கள் உரிய பாதுகாப்போடு பணியாற்றிடவும்,தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் 850 முகக்கவசங்கள், 100 கையுறைகள், 5 லிட்டர் சானிடைசர், 40 ஹேண்ட் சானிடைசர் ஆகியவற்றை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது. 

பாரதி எஸ்டேட்ஸ் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஆசிரியர் கனகராஜ், பொருளாளர் இன்ஜினியர் சுந்தர் ஆகியோர் நேரில் சென்று காவல் ஆய்வாளர் அவர்களிடம் வழங்கி உதவினர்.... 

கொரானா பேரிடரில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களுடன் துணை நிற்போம்....

நம் மக்களை காக்க நம்மால் இயன்றதை செய்வோம்... 

என்றும் மக்கள் நலனில்... 

*பாரதி எஸ்டேட்ஸ் குடியிருப்போர் நலச் சங்கம்*