"வேலூர் மாவட்டத்தில் வீட்டிற்கே செல்லும் வாரிசுச் சான்றிதழ். ஆட்சியர் நடவடிக்கை!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் வருவாய்த்துறையின் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு எளிதாக வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று வாரிசு சான்று வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட (பொறுப்பு) ஆட்சியர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்
மேலும், "கடந்த 3 மாதத்தில் மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்பு குறித்த பதிவுகள் சுகாதாரத் துறை துணை இயக்குநர் வாயிலாக பெறப்பட்டு அந்த பட்டியலை தாலுகா வாரியாக பிரித்து சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது இறப்புச்சான்று நகல் வழங்கப்படும், "என்றும் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் சுரேஷ்குமார்...
