ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் புதிய வழிமுறைகள்...

ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் புதிய வழிமுறைகள்....


இந்திய குடிமக்கள் மத்தியில் மிக முக்கிய ஆவணமாக இருந்து வரும் ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எவ்வாறு என்பது குறித்த புதிய வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அரசால் நாடு முழுவதும் மிக முக்கிய ஆவணமாக வழங்கப்பட்டது தான் ஆதார் கார்டு. தற்போதைய காலத்தில் ஓர் மனிதனின் அன்றாட வாழ்வில் ஆதார் கார்டு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் பல தரப்பு மக்கள் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலே தங்களுக்கான ஆதார் கார்டினை பெற்றிருப்பர். எனவே அவர்களின் ஆதார் கார்டுகளில் அவர்களின் பழைய புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதனை மாற்றுவது எவ்வாறு என்று மக்கள் குழம்பி வருகின்றனர்.

தற்போது அதனை இணையம் மூலம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று குறித்த வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆதார் கார்டில் ஏதேனும் பிழை ஏற்பட்டிருந்தாலும் அதனை இந்த வழிமுறைகளை பின்பற்றி மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ஆதார் சேர்கை மையம் மூலம் மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிமுறைகள்:

  • பயனர்கள் Aadhaar Enrolment/Correction/Update என்னும் பார்மினை UIDAI’s அதிகாரபூர்வ தளமான https://ssup.uidai.gov.in/ssup/ என்பதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் பயனர்கள் தங்களது புகைப்படம், மேலும் பெயரில் ஏதும் பிழை இருந்தால் தங்களது பெயர், முகவரி போன்றவற்றினை பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவு செய்த பின்பு அதனை ஆதார் சேர்க்கை மையத்தில் கொடுக்க வேண்டும்.
  • மேலும் அந்த முகாம்களில் பயனர்களின் கைரேகை, கண் ரேகை போன்றவற்றினை கேட்கப்படும்.
  • இதற்கான சேவை கட்டணமாக பயனர்கள் முகாமிற்கு ரூ.100 செலுத்த வேண்டும்.
  • பணிகள் அனைத்தும் முடிந்த பின்பு முகாமில் இருந்து பயனர்களுக்கு ஆதார் அப்டேட் செய்த ரசீது ஒன்று கொடுக்கப்படும்.
  • அதில் உள்ள URN மூலம் பயனர்கள் தங்களது ஆதார் அப்டேட் குறித்து அறிந்து கொள்ளலாம். ஆதார் அப்டேட் ஆன ஒரு வார காலத்தில் புதிய ஆதார் கார்டு பயனர்கள் வீட்டிற்கு வந்தடையும்.
  • ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது அது தற்போது ஒரு தெளிவில்லாமல் தான் இருக்கிறது.. இன்று எல்லாவற்றிற்கும் ஆதார் தான் அவசியம் இதில் உங்களின் அழகான முகத்தை காண இப்பொழுதே இந்த வழியை பயன்படுத்துங்கள்.