வாலாஜா அருகே நின்றிருந்த கார் மீது மோதி கவிழ்ந்த கார் - இருவர் படுகாயம்

 ""வாலாஜா அருகே நின்றிருந்த கார் மீது மோதி கவிழ்ந்த கார் - இருவர் படுகாயம்!

ராணிப்பேட்டை வாலாஜா சுங்கச்சாவடி அடுத்த காலஸ்திரியான் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவர் சென்னையிலிருந்து ஊரடங்கிற்கு முன்பாகத் தனது வீட்டிற்கு வந்து தனது மகள் இந்துமதியையும், பேரக் குழந்தைகளையும் தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அடுத்த பாகவேளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் காலை உணவிற்காகக் காரை நிறுத்தி விட்டுச் சாப்பிட சென்றிருந்தார்.

அப்பொழுது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த காரின் சக்கரம் பயங்கரமாக வெடித்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது. இதில் அந்தக் கார் சுமார் பத்தடி தூரத்திற்கு மேல் சென்று தலைகீழாய் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...