வேல் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் கேணிக்கரையில் உள்ள வேல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் லீலாவதி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை கண்கானிப்பாளர் மருத்துவர் மலையரசு குடும்பத்தினர் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கீழநெல்லிக் கோட்டை அருள்மிகு பெத்த பெருமாள் கோவில், அருள்மிகு காடேரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அந்த பகுதியில் சக்திவாய்ந்த கோவிலாகும் மருத்துவர் மலையரசுவின் குல தெய்வ கோவிலாகும். இக்கோவிலுக்கு வருடா வருடம், குடும்பத்தினருடன் சென்று பூஜைகள் செய்து வணங்கி அந்த பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வருவது வழக்கம்.
. இவ்வருடம் கோவிலில் பணிபுரியும் 26 குடும்பங்களுக்கு ரூ.2500 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களும், தலா ரூ.1000 ரொக்கமும் வழங்கினார். மேலும் அந்த குடும்பங்களுக்கான ஒரு நாள் மதிய உணவு தயார் செய்து வேல் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

