காங்கிரஸ் கட்சி சார்பில் கோவில் பணியாளர்களுக்கு நிவாரண உதவி
இன்று 17/06/2021 மாலை 5 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் இ.திருமகன் ஈவெரா MLA அவர்கள் ஈரோடு கோட்டை ஆரூத்துரா கபாலீஸ்வரர் வகையறா திருக்கோயில்கள் & ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில்களில் பணிபுரியும் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 70 அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் E.P.ரவி தலைமையில் இரண்டாம் மண்டல தலைவர் ஆர் விஜய பாஸ்கர் முன்னிலையில் முனைவர் வி.சுந்தர்ராஜன் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார் துணைத்தலைவர் களான முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாஜலம் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ. பெரியசாமி, மாவட்ட நெசவாளர் பிரிவு சி.மாரிமுத்து ,மாநில எஸ்சி பிரிவு குளம் எம்.ராஜேந்திரன்,இளைஞர் காங்கிரஸ் கே.விஜய் கண்ணா,மாவட்ட பொது செயலாளர் அன்பழகன்,மாவட்ட செயலாளர்கள் , சிவா என்கிற சிவகுமார்,சதீஷ்,மொடக்குறிச்சி முன்னாள் வட்டாரத்தலைவர் V.K.செந்தில் ராஜா,ஈரோடு மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் திண்டல் பாலாஜி,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
