பென்னாகரம் அருகே சாராயம் விற்க முயன்றவர் கைது

 பென்னாகரம் அருகே சாராயம்  விற்க முயன்றவர் கைது


பென்னாகரம்,ஜீன்.5-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாது வயது 43. கோழி வியாபாரியான இவரது நிலத்தில் சாராயம் காட்சி விற்பனை செய்ய முயல்வதாக பென்னாகரம் போலீசிற்கு தகவல் வந்தது. இதனை அடுத்து பெண்ணாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் உள்ளிட்ட போலீசார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் 50 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சாராய ஊழலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.