*மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் CITU பொது தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் CITU சங்க பொதுச்செயலாளர் பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாஷா கூறியதாவது: தில்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப்பெறக்கோரி 200 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, அவர்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டமசோதாக்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருதனால், மோட்டார் வாகன தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்ந்து வருவதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை நடுத்தர மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் தாராள செலவு செய்யும் குடும்பதார் தொடங்கி மாத பட்ஜட் போடும் குடும்பத்தாருக்கும் மிகுந்த வேதனையில் வாழ்ந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்
தமிழக அரசு கடந்த தளர்வின் போதே சாலையோர சிறு வியாபாரிகளை கடை போட அனுமதி அளித்தும் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நீலகிரி காய்கறிகளை விற்பதற்கும் உருளைக்கிழங்கு மண்டி உட்பட பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதி மறுத்து வருகிறது இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களை வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்
மேலும், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள், மின்சார சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் திரும்பப்பெற வேண்டும். விவசாய விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை வேண்டும்.
வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து ஏழைக்குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகையும், 10 கிலோ உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்வதுடன், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும்,
மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளாமருத்தூர் பகுதியிலிருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள் இதில் ஆண் பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க பொறுப்பாளர்கள்
சித்திக். MH சம்சுதீன், சண்முகம், பதுருதீன், ராஜசேகர், J. சம்சுதீன், கேபிள்சாதிக்அலி, நிஜாமுதீன், சென்னி அம்மா, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
