"சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம்குடும்பத்தினருக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆறுதல்
சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் அவர்களின் துணைவியார் திருமதி கலைவாணி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் இல்லத்திற்குச் சென்று மறைந்த கலைவாணியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பின்னர் எம்எல்ஏ முனிரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஸ்யம், ஒன்றிய தலைவர்கள் காவேரிப்பாக்கம் செல்வம், சோளிங்கர் கார்த்தி, நகர தலைவர் கோபால், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
