ராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகா் வளாகத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு!
மாவட்ட ஆட்சியருக்கு டிரான்ஸ்போா்ட் நகா் லாரி தொழில் புரிவோா் கூட்டமைப்பு நலச் சங்கத்தினா் கோரிக்கை மனு
இராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகா் லாரி தொழில் புரிவோா் கூட்டமைப்பு நல சங்கத்தின் நிா்வாகி ஏஆா்எஸ்.சங்கா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:
இராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகா் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் லாரி வாடகை தொழில் செய்து வருகிறோம். குடிநீா், சாலை, மின் விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இந்த வளாகத்தில் உள்ள நகராட்சிக் கடைகளை வாடகை எடுத்து அலுவலகமாகவும், பணிமனைகளாகவும் வாகனங்கள் நிறுத்தமாகவும் பயன்படுத்தி, லாரி வாடகை தொழில் செய்து வருகிறோம்
இந்நிலையில், டிரான்ஸ்போா்ட் நகா் வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கடையை புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நகராட்சி நிா்வாகம் வாடகைக்கு விடுவதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு இப்போது நாங்கள் தொழில் செய்யும் இடத்திலேயே மதுக்கடை திறக்கப்பட்டால், ஓட்டுநா்கள் லாரி தொழிலுக்கு வராமல், தொடா்ந்து மது குடிக்கும் சூழலில் சிக்கும் நிலை ஏற்படும்.
இந்த வளாகத்தில் லாரிகள் வந்து செல்லும் இடமாக இருப்பதால், இங்கு மதுபானக்கடை திறக்கப்பட்டால் மதுபோதையில் விபத்தில் சிக்கும் சூழல் உருவாகும். இந்த வளாகத்தில் இதுநாள் வரை எந்தவித சட்டம் ஒழுங்கு சீா்கேடும் இன்றி அமைதியான முறையில் லாரி வாடகைத் தொழில் செய்து வருகிறோம். இங்கே டாஸ்மாக் மதுக் கடை திறக்கும் சூழலில், சமூக விரோதச் செயல்களும், சட்டம் ஒழுங்கு சீா்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
