ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு முஸ்லிம் லீக் கட்சியினர் பாராட்டு....

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு முஸ்லிம் லீக் கட்சியினர் பாராட்டு....


ஏப்-19 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் சேவையிலே இந்தியாவிலே முன்மாதிரியாக திகழ்ந்த எம்பி என்ற பட்டத்தை பெற்றவர்.

ஏழை எளிய மக்களுக்கும்,கல்வியில், மாணவர்களுக்கும், உதவித்தொகை வழங்கி மக்களின் கண்ணீரை துடைத்தவர்.

பேரிடர் காலங்களிலே தன்னுடைய அயராது பணியினால் கொரோனா காலத்தில் ஏழை எளியவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஏழை எளிய மக்களின் துயரில் பங்கெடுத்தவர்.

மாவட்டத்தினுடைய அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றுவதிலே தன்னை தானே அதிகளவிலே ஈடுபடுத்தி கொண்ட மாபெரும் பாராளுமன்ற உறுப்பினர்.

இத்தகைய பாராளுமன்ற உறுப்பினரை பெற்றமைக்காக எங்கள் மாவட்டம் பெருமை கொள்கிறது.

மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் அன்பு சகோதரர் நவாஸ்கனி எம்பி அவர்களை மாவட்டத்தின் சார்பிலே வாழ்த்தி அவர்கள் இன்னும் பல படித்தரங்களை பெற்று சிறப்பிக்க வேண்டும் என்று இ.யூ.மு.லீக்கின் சார்பாக  நெஞ்சார வாழ்த்துகிறோம்.

இ.யூ.மு.லீக் மாநில பொருளாளர்

 சாஜஹான்

ஹாஜி A.வருசை முகம்மது

மாவட்ட தலைவர்.

A.L. முகம்மது பைசல், 

மாவட்ட செயலாளர்.

மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒலிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு