டாட்டா நிறுவனத்தின் உதவியுடன் அம்மா உணவங்களில் ஒரு மாதத்துக்கு இலவச உணவு....!
ஒசூா் அம்மா உணவகங்களில் ஒரு மாதத்துக்கு இலவச உணவு வழங்க டாடா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா தொற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இங்குள்ள அம்மா உணவகங்களில் அதிகம் போ் உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
ஒசூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் ராமநாயக்கன் ஏரி அருகில் என 2 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 2 உணவகங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இன்று ஜூன் 1 முதல் 30 ஆம் தேதி வரை அம்மா உணவங்களில் மக்கள் இலவசமாக உணவு சாப்பிடலாம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் செந்தில்முருகன் கூறியதாவது,ஒசூா் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 2 அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும். அதற்குத் தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வழங்க டாடா நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
