ஜாதி பெயரை சொல்லி திட்டியதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்
https://youtu.be/iiJKcKNPUjo
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் நாகியம்பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா, விஜயா,கண்ணம்மாள், ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் புகார் மனு கொடுக்க வந்தனர் .அவர்கள் கூறியதாவது.பூர்வீக சொத்து மேற்கு ராஜபாளையம் கிராமத்தில் இருக்கிறது அது குறித்து ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் எங்கள் சொத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து மேற்கு ராஜ பாளையம் கிராமத்தைச் சார்ந்த பெரியசாமி என்பவர். எங்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் சாதியை சொல்லி திட்டி அசிங்கபடுத்தியதால் பாதிக்கப்பட்ட நாங்கள் மல்லியகரை காவல்நிலையத்தில் வாய்மொழி புகார் கொடுத்தபோது. அதனை உதவி ஆய்வாளர் வாய்மொழி புகாரை வாங்க மறுத்ததால். ஆத்தூர் டிஎஸ்பி அவர்களிடம் புகார் கொடுத்தோம். அதன்பேரில் எங்கள் புகாரினை விசாரணை செய்த தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் எதிரிக்கு சாதகமாகப் பேசி எங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு மீண்டும் எங்களை மிரட்டி அனுப்பினார்.அதனால் மேற்படி பெரியசாமி,தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்.மற்றும் மல்லியகரை காவல் நிலைய எஸ். எஸ்.ஐ.ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.