"வாலாஜாவில் தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!
இந்தியன் ரெட் கிராஸ் மற்றும் வாலாஜாபேட்டை கிரிக்கெட் அகடமி இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் வாலாஜாபேட்டையில் உள்ள த்ரௌபதி அம்மன் கோவிலில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வாலாஜா நகர தலைவர் குமார்நகர செயலாளர் அகபர்ஷரிப் வாலாஜாபேட்டை கிரிக்கெட் அகாடமி ஜெகன் பாபு. விஜய பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இந்த முகாமில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
செய்தியாளர் சுரேஷ்குமார்..
