தனியார் பள்ளிகள் மீது ஏன் இந்த வஞ்சகம்...?

 தனியார் பள்ளிகள் மீது ஏன் இந்த வஞ்சகம்...?


பிளஸ் 2 தேர்வு ரத்தானால் தனியார் பள்ளிகளுக்கே லாபம் என்று தெரிவித்துள்ள மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், பிளஸ் 2 தேர்வை நடத்த வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்வு நடத்துவது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். மாணவர்கள், பெற்றோரிடம் தேர்வு குறித்து கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் தேர்வு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இரா.இளங்கோவன் பிளஸ் 2 தேர்வைக் கட்டாயம் நடத்தவேண்டும் என வலியுறுத்தி, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

''கரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் வேளையில், அதன் தாக்கம் குறைந்த நேரத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடங்களை மூன்று மாதங்கள் முழுமையாக நடத்தி முடித்துள்ளோம். அவர்கள் இழந்த கற்றல் நாட்களின் பாதிப்புகளை நன்கு உணர்ந்து, ஆர்வமுடன் படித்தனர். தங்களின் வழிகாட்டுதல்படி மீண்டும் 'ஆன்லைன்' வழியே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது பாடங்களோடு மாணவர்கள் தொடர்பில்தான் உள்ளனர்.

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது கூட்டம் சேர்ந்தது போலவும், மார்க்கெட், கோயில்களில் பொதுமக்கள் கூடுவது போலவும் மாணவர்கள் கூடப்போவது இல்லை. அரசின் துரித நடவடிக்கையால் தற்போது 2ஆம் அலையும் குறைகிறது. ஜூன் 15க்குப் பிறகு 12ஆம் வகுப்பு மாணவர்கள் அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே அறைக்கு 10 அல்லது 20 மாணவர்கள் வீதம் அனுமதித்து தக்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்தலாம்.

தேர்வின்றித் தேர்ச்சி அளிப்பது மாணவர்களின் எதிா்காலத்தைச் சிதைக்கும். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். 10 சதவீத அளவிலுள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு வேண்டுமானால் ஆல் பாஸ் பயனளிக்கலாம். 90 சதவீதம் நன்கு படிக்கும், உயர் கல்வியில் சாதிக்க விரும்பும், உண்மையாகப் படிக்கும் மாணவர்களின் எதிா்காலத் திட்டங்கள் பாழாகிவிடும். உயர்கல்விச் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் உருவாகும்.

*பருவத் தேர்வு, திருப்புதல் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி வழங்கினால் மெட்ரிக், தனியார் பள்ளிகளுக்குத்தான் லாபம். இதை வைத்துக் கூடுதல் மதிப்பெண்களை வழங்குவதாகப் பெற்றோரிடம் ஆசையைத் தூண்டி, நிலுவைக்கான முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வாய்ப்புள்ளது.*

அரசுப் பள்ளிகளில் இதுபோன்று செய்ய வழியில்லை. எதுவானாலும் முறையாகச் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்பி, தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் பாதிக்கப்படுவர். மன உளைச்சலும் ஏற்படும். எனவே, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகளிலிருந்து வினாத்தாள்களைத் தயாரித்து, பாதுகாப்புடன் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும்''. இவ்வாறு இளங்கோவன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இளங்கோவன் கூறியிருப்பது ஓரளவிற்கு உண்மை என்று சொன்னாலும் அவருக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி தேவையில்லை இந்த கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் வாழ்வா சாவா என்று போராடிக் கொண்டுள்ளனர் இதில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது.

நீங்கள் நினைக்கிற மாதிரி தனியார் பள்ளி தாளாளர் கள் ஒன்றும் அவ்வளவு கொடுமைக்காரர்கள் இல்லை. உங்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் அவர்களை மனதில் வைத்து நீங்கள் எல்லோரையும் இப்படி பேச கூடாது.

எத்தனை பேருக்கு நாங்கள் இலவச கல்வி கொடுக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா...? எத்தனை பேருக்கு கட்டண சலுகை கொடுத்திருக்கிறோம் தெரியுமா...? எத்தனையோ பேர் முழு  கட்டணமும் செலுத்தாமல் ஏமாற்றி விட்டு சென்றிருக்கிறார்கள் அதுவாவது தெரியுமா...? இது எதையுமே தெரிந்து கொள்ளாமல் தேர்வு நடத்தினால் அவர்கள் வசூல் செய்து விடுவார்கள் என்று அறிக்கை விடுவது எவ்வளவு வஞ்சகத் தனம் நெஞ்சம் வலிக்கிறது என்று பல பள்ளி நிர்வாகிகள் தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர். 

அரசுப் பள்ளிகள் சரியில்லை தரமான கல்வி அங்கு கிடைப்பதில்லை என்று தான் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதற்கு முழு முதற் காரணமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் அவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருந்தால் இவ்வளவு பேர் தனியார் பள்ளிக்கு போக மாட்டார்கள். இவர்கள் வீட்டு பிள்ளைகள் மற்றும் கோடிஸ்வர பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கலாம். ஆனால் நடுத்தர ஏழை விட்டு பிள்ளைகள் இதுபோன்ற பள்ளிகளில் படிக்க கூடாது அவர்கள் கட்டணம் வாங்கக்கூடாது என்று நினைப்பது எவ்வளவு பெரிய கேடு கெட்ட செயல்.

இவர்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக நடுத்தர ஏழை வீட்டு பிள்ளைகள் அனைவரும் அரசு பள்ளிக்கு தான் வரவேண்டும் என்று அடம் பிடிப்பது எவ்வளவு அசிங்கமான செயல்.இன்றைக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இட ஒதுக்கீட்டில் 7.5% கொடுத்து இருப்பது என்பது உண்மையிலே அது மாணவர்களுக்கான சலுகை அல்ல அதை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சலுகையாக தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் என்று சொன்னால் இந்த சலுகை கொடுத்தாலாவது மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் வந்துசேர்வார்கள் இல்லாவிட்டால் வரமாட்டார்கள் என்பது தான் அதன் உண்மையான லாஜிக்கே.

உண்மையில் பார்க்கப் போனால் இட ஒதிக்கீடு கொடுத்துத்தான் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதற்கு காரணம் இந்த ஆசிரியர்கள்தான்.

பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் செயல்படாமல் இருந்ததற்கும் இவர்கள் நடத்திய அரசியல் தான் காரணம்.

அப்போது corona  கொடிய வேதனை காட்டாத பொது தேர்வு வேண்டாம் என்றார்கள் தேர்வு வைத்தால் நாங்க செத்துருவோம் மாணவர்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேட்டது இந்த வாய் தான்.

 ஆனால் இப்போது corona கோர தாண்டவம் ஆடுகிறது தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் மாண்டு வருகிறார்கள் இருந்தாலும் பரவாயில்லை தேர்வு வையுங்கள் என்பதும் இந்த வாய் தான்.

 இது என்ன அரசியலோ புரியவில்லை...?