சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு டெம்பிள் சிட்டி கிளப் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!!!!

 "சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு டெம்பிள் சிட்டி கிளப் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!!!!

ராணிப்பேட்டை மாவட்டம்

சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு டெம்பிள் சிட்டி கிளப் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் 3 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டெம்பிள் சிட்டி தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் கலந்து கொண்டு ரூ.3 லட்சம் மதிப்பில் 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தலைமை மருத்துவர் இளங்கோவிடம் வழங்கினார் இதில் சோளிங்கர் தாசில்தார் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் சென்பகராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், டெம்பிள் சிட்டி நிர்வாகிகள் ஜெகன்நாதன், ராஜேந்திரபிரசாத், மருத்துவ குழு தலைவர்கள் ராஜேஷ்குமார், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..