வயிற்றுப்பிழைப்புக்கு அனுமதி கேட்ட அப்பாவிக்கு நெஞ்சில் மிதி., செருப்பால் தாக்குதல்..!!!! திமுக பிரமுகர் வெறிச்செயல்.!!!

 ""வயிற்றுப்பிழைப்புக்கு அனுமதி கேட்ட அப்பாவிக்கு நெஞ்சில் மிதி., செருப்பால் தாக்குதல்..!!!! திமுக பிரமுகர் வெறிச்செயல்.!!!!


காய்கறி தள்ளுவண்டிக்கு திமுகவினரிடம் அனுமதி பெறாத காரணத்தால், வியாபாரியை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் ஊரடங்கு காலத்தில் தள்ளுவண்டியில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்றாலும், திமுகவினரிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரியாணி கடையின் உரிமையாளரான அயூப் என்பவர், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்க அனுமதி வேண்டி மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளார். 2 நாட்களாக எந்த விதமான பதிலும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால், மற்றொரு வியாபாரி திமுகவினரிடம் ரூ.600 கொடுத்து விற்பனைக்கான அனுமதி டோக்கனை வாங்கியுள்ளாதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை அறிந்த அயூப் சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் முறையிடவே, இந்த தகவல் திமுக நகர தலைவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திமுக நகர தலைவர் அடியாட்களுடன் சென்று அயூப்பை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், காலனியால் அயூப்பை தாக்கியுள்ளனர்.

மேலும், நீ இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும், எங்களின் ஆட்சி நடப்பதால் எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் திமுக நகர தலைவர் ஜூபேர் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..