அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...!

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு...! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...!!


*2020 - 2021 கல்வி ஆண்டின் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற கீழ்க்காணும் பதிவேடுகளை தயார்நிலையில்* வைத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

1) LKG UKG & முதல் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலும் உள்ள மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் ஜுன் 2020  முதல் ஏப்ரல் 2021 வரை மாதவாரியாக EMIS ல் உள்ள பதிவின்படி எந்த ஒரு குழந்தையின் பெயரும் விடுபடாமல் அனைத்துக் குழந்தைகளின் பெயரையும் எழுதி இருக்க வேண்டும்.

2) மதிப்பெண் பதிவேட்டில் மாணவர்கள் வருகை பதிவின்படி (PUPIL'S ATTENDANCE REGISTER ) வகுப்பு வாரியாக அனைத்து மாணவர்கள் பெயர்களையும் எழுதி ஒவ்வொரு வகுப்பின் கீழேயும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

(இதிலும் EMIS பதிவின்படி எந்த ஒரு குழந்தையின் பெயரும் விடுபடக் கூடாது.) அனைத்து குழந்தைகளின் பெயருக்கு நேரில் *தேர்ச்சி விபரம் என்ற கலத்தில் தேர்ச்சி என்று எழுதவும்.

வேலை நாட்கள்  என்ற கலத்தில் ___ (கோடு மட்டும்) போடவும். யாருக்கும் எவ்வித மதிப்பெண்ணும் குறிப்பிட வேண்டாம்*

3) மதிப்பெண் பதிவேட்டில் வகுப்பு வாரியான  சுருக்கமும் (Class & Section wise ABSTRACT ) மற்றும் ஆண் பெண் சாதிவாரியான சுருக்கமும் (Gender  wise & Community wise ABSTRACT )  போட வேண்டும்.

*4)இந்த சுருக்கங்களின்  கீழே  தீர்மானம்  எழுத வேண்டும். தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப் பட்டுள்ள விதிகளை குறிப்பிடப்பட வேண்டும்.

*அதில் அனைத்து வகுப்பாசிரியர்களும் கையொப்பமிட வேண்டும். தலைமையாசிரியரும் கையொப்பமிட வேண்டும்.

5)ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள்  எடுத்த விடுப்பு விவரங்களைக் குறிப்பிடவும்.

( மருத்துவ விடுப்பு, Covid. 19 சிறப்பு விடுப்பு, மகப்பேறு விடுப்பு மற்றும் இதர நீண்ட விடுப்பு நாட்களை குறிப்பிடவும்.) 

6) மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர் மற்றும் எண்ணிக்கை, மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர் மற்றும் எண்ணிக்கை,  மதிப்பெண் பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர் மற்றும் எண்ணிக்கை அனைத்தும் EMIS - 

இல் உள்ள மாணவர் பெயர் மற்றும் எண்ணிக்கையுடன் சரியாக இருக்க வேண்டும்.

7) மக்கள் தொகைப் பதிவேடு, 5+ பள்ளி வயது குழந்தைகளின் விவரம்

*இவை அனைத்தும் 2 பிரதிகள் (TWO COPIES)* வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும்.

வட்டாரக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற பின் மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

*கடைசி வேலை நாள் 30.04.21* எனக் குறிப்பிட வேண்டும்.

வட்டாரக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற பின், EMIS -இல் promotion கொடுத்த பின்பு தான் online TC எடுக்க வேண்டும்.

*EMIS இல் promotion option ஓரிரு நாளில் கொடுத்த உடன் இப்பணிகளை மேற்கொள்ளவும்.*

2021- 2022 மாணவர் சேர்க்கை விவரங்களை promotion work முடிந்தவுடன் EMIS இல் update செய்யலாம்.

*Lockdown முடிந்த உடன் ஒப்புதல் பெற வரவேண்டிய நாள் அறிவிக்கப்படும்.*