வேலூர் சத்துவாச்சாரி அருகே கம்பிகளுக்கு இடையே சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு!!!

வேலூர் சத்துவாச்சாரி அருகே கம்பிகளுக்கு இடையே சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு!!


சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலை அருகே கெங்கையம்மன் கோவில் மற்றும் ஆர்டிஓ அலுவலகம் செல்லும் சாலையை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை அமைக்கும் பணி பல மாதங்களாக மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் பணி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் ராட்சத எந்திரம் ஒன்றை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சுரங்கப்பாதை பணி மேற்கொள்ள அமைக்கப்பட்டிருந்த கம்பின்து இடைவெளியில் சிக்கி கொண்டது

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.