தமிழகத்தில் மிகப்பெரிய கனவு திட்டமான காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது....!
இச்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லணை வரை 1,211 கி.மீ. தொலைவுக்கு கோதாவரி - காவேரி இணைப்புத்திட்டம் உள்ளது.கிட்டத்தட்ட இதன் மதிப்பு ₹85962 கோடியாகும்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனா சாகர் அணை மற்றும் ஆந்திராவில் உள்ள சோமசீலா அணை வழியாக தமிழகத்தின் கல்லணைக்கு கால்வாய்க்கு கோதாவரி நீர் கொண்டு வரும் திட்டம்.இதில் கிருஷ்ணா, பெண்ணா ஆகிய நதிகளும் இணைகின்றன..
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள 143 நாட்களில் 247 டிஎம்சி தண்ணீர் விடுவிக்கப்படும்.இதில் வீணாகும் நீர் போக மீதமுள்ள 230 டிஎம்சி நீரில் தெலங்கானாவுக்கு 65.8 டிஎம்சியும், ஆந்திராவுக்கு 79.92 டிஎம்சியும், தமிழகத்துக்கு 84.28 டிஎம்சி நீரும் கிடைக்கும் என அறிக்கையில் சொல்கிறார்கள்..
இந்த திட்டத்தை ஜல்சக்தி துறையின் கீழே வரும் NWDA இறுதி செய்திருக்கிறார்கள்.இதற்கு தான் மேற்கொண்ட பணிகளை சொல்லி,பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி..இதை தமிழக ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.ஆங்கில ஊடகங்களும்,தெலுங்கு ஊடகங்களும் திரும்பத் திரும்ப போட்டு காட்டினார்கள்.இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவடைந்துவிட்டால் மிகப்பெரிய கனவு திட்டம் ஒன்று முடிந்ததாக அர்த்தம்.
மத்திய அரசு என்றும் தமிழக நலனை குறி வைத்தே இயங்குகிறது குறிப்பாக மோடி அரசு.ஆனால் ஊடங்கள் - தமிழக அரசியல் கட்சிகள் - தமிழக மக்கள் என முக்கூட்டு கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கிறது..இந்த ஆட்டம் இன்னும் எத்தனை நாள் போகும் என்று தெரியவில்லை..தன் குடும்பத்தை பணயமாக வைத்து சூதாடும் பித்து நிலையில் இது நீண்டு கொண்டே போகிறது.பார்ப்போம் விதி எங்கு சென்று முடியும் என்று.

