காவல்துறையில் இப்படிப்பட்டவர்களும் உண்டு..... காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு துரைஒரு உதாரணம் .

 காவல்துறையில் இப்படிப்பட்டவர்களும் உண்டு..... காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு துரைஒரு உதாரணம் .

கோவை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நடந்த காட்சி.

நேற்று முன்தினம் இரவு

ஈரோட்டைச் சேர்ந்த நஸீப் என்பவர்,

தனது இரு சக்கர வாகனத்தில் கோவை சென்றுள்ளார்.

அவர் சென்ற புல்லட் பலமுறை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியதும் இல்லாமல், 

ஒரு கட்டத்தில் தள்ளிக்கொண்டு பல கிலோ மீட்டர் செல்லும் அளவுக்கு 

மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சி.ஆர்.வி.காவலர் துரை தனது குழுவினருடன் அவரை விசாரித்துவிட்டு,

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

ஜீப்பில் இருந்த ஸ்பேர் பார்ட்சை எடுத்துவந்து, அரை மணியில் புல்லட்டை ரெடி செய்து தந்துள்ளார்.

பல கிமீ தூரம் சிரமத்துடனும் வலியுடனும் தள்ளிக்கொண்டு வந்த இவருக்கு, 

பிரதிபலன் எதிர்பாராமல், இரவில் 

துரை செய்த இந்த உதவி காவலர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு

இவர் செய்த உதவி காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஒரு உதாரணம் துரை.

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

.கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G.முருகன்