வியாசர்பாடியில் காவலர்களை தாக்கி தப்பித்த குற்றவாளிகள் கைது சிறையில் அடைப்பு

வியாசர்பாடியில் காவலர்களை தாக்கி தப்பித்த குற்றவாளிகள் கைது சிறையில் அடைப்பு


வியாசர்பாடி காவல் நிலையத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 3 பழைய குற்றவாளிகள் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் வினோ ஜெயகுமார்  என்பவரை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜெகதீஸ்வரன் என்பவர் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்து இருந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் முல்லை நகர் சுடுகாடு மேம்பாலம் அருகே பதுங்கி இருந்த அஜய் புத்தா என்பவன் காவலர்களை பார்த்து தப்பி செல்ல முயன்ற போது மேம்பாலத்தில் இருந்து  கீழே விழுந்ததால் அவருக்கு வலது கையில் அடிப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்


 மூன்றாவது குற்றவாளியான இட்டா அஜித் என்பவர் கூட்செட் சாலையில்  வக்ஷ தனி படையினரால் பிடிக்கப்பட்ட போது அங்கிருந்து தப்பி செல்ல இருந்த காரணத்தினால் கீழே விழுந்ததால் அவருக்கு இடது கையில் அடிப்பட்டு அவரும் இன்று சிறையில் அடைக்கப் பட்டார்.