பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் கண்டித்து பென்னாகரத்தில் இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
.தர்மபுரிமாவட்டம் பென்னாகரம்பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் பென்னாகரத்தில் இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெண்ணாகரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணாகரம் நகர செயலாளர் எஸ் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பென்னாகரம் தொகுதி செயலாளர் கருப்பண்ணன் மாநில விவசாய பிரிவு இணைச் செயலாளர் சிவாஜி மக்கள் அதிகார பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணாகரம் பகுதி செயலாளர் கே அன்பு மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிஎம் முருகேசன் ரவி சிவா சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சிராஜி போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி மனோன்மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக மோடி அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை விலக்கிக் கொள்ள வேண்டும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ 7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்
