பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பெத்தநாயக்கன்பாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் திரு எஸ் கே அர்த்தனாரி அவர்களின் அறிவுறுத்தலின்படி பெத்தநாயக்கன்பாளையம் எக்ஸ் எம்எல்ஏ திரு சிபி பழனி முத்து அவர்களின் வழிகாட்டுதலின் படியும் பெத்தநாயக்கன்பாளையம் நகரத் தலைவர் திரு எஸ்.பாலமுருகன் அவர்களின் தலைமையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து பெத்தநாயக்கன்பாளையம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கன் பழனிமுத்து கோவிந்தன் திருச்சிற்றம்பலம் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
