ஏர்வாடி தர்ஹாவில் சந்தன கூடுதிருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்:

 ஏர்வாடி தர்ஹாவில் சந்தன கூடுதிருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் உள்ள ஏர்வாடி தர்ஹா உள்ளது இந்த தர்ஹாவில் மஹான் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீதின் 847-ம் ஆண்டு மனித நல்லிணக்க உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று 22-06-2021 மாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடமும் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக  நடைபெறவில்லை இந்த தர்ஹாவிற்கு டெல்லி, கேரளா, கர்நாடகா மற்றும் உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் யாத்திரிகர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்த தர்ஹாவிற்கு வருபவர்கள்  பில்லி சூனியம் நீங்கி குணமாகி செல்கின்றனர். இந்த வருடமும் கொரோனா தொற்றின் காரணமாக உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடத்தவில்லை. நேற்று மாலை 5 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அடிமரம் கொடி மரம்  ஊன்றி அதில் கொடியேற்றுவது வழக்கம் வழக்கத்திற்கு மாறாக தர்ஹா தொழுகை பள்ளிவாசலில் அமைந்துள்ள உயரமான மினராவில் கொடியேற்றப்பட்டது.முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட தலைமை ஹாஜி சாலாஹீதீன் ஆலிம் தலைமையில் தர்ஹா ஹக்த்தார்கள் ஆலிம்கள் கலந்துகொண்ட மவுலீது உலக நன்மைக்காகவும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு பிராத்தனை நடந்தது. வருகிற 4-ம் தேதி மாலை உருஸ் என்னும் மனித நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் என்று ஏர்வாடி தர்ஹா ஹக் த்தார்கள் தெருவித்தனர். மேலும்  தமிழக அரசின் ஊரடங்கு அறிவிப்பின் படியும் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க்க அனுமதி இல்லை.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு