உடைப்பு ஏற்பட்ட ஏரியை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மேல்பாடி உள்வட்டம், மாதாண்டகுப்பம் கிராமம், பட்டா எண் 145-இல் தனியாருக்கு சொந்தமான ஏரிஉடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் இன்று 25.6.2021ஆய்வு செய்தார்
காட்பாடி வட்டம் மாதண்ட குப்பம் கிராமத்தைச் சேர்ந்ததிரு.மாசிலாமணி மற்றும் 6 நபர்களின் பெயரில் கூட்டாக உள்ள புல எண் 153, பரப்பளவு 5.46.5 ஹெக்டேர், புலத்தில் அமைந்துள்ள ஏரியின் மதகு கடந்த ஆண்டு 26.11.2020 அன்று நிவர் புயலின் போது சேதமடைந்தது.
இதனை தொடர்ந்து 23.06.2021 அன்று இரவு பெய்த மழையினால் மேற்படி ஏரியில் தண்ணீர் தேங்காமல் ஏற்கனவே உடைந்த மதகின் வழியே தண்ணீர் வெளியேறி கால்வாயின் அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்பட்டது.
, வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி ஏரியின் உடைந்த மதகு மற்றும் சேதமடைந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு உடைந்த மதகினை சரிசெய்யவும், பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்தினார்
. மேற்படி ஆய்வின் போது
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு. செந்தில் குமரன்
செயற்பொறியாளர் திரு செந்தில்குமார்
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு. விஸ்வநாதன்
வேளாண்மைத் துறை அலுவலர்கள்
காட்பாடி வட்டாட்சியர், மேல்பாடி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் மாதாண்டகுப்பம் கிராம நிருவாக அலுவலர்
மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்
