"குப்பைகள் தண்ணீரில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா
ரபிக் நகர் செல்லும் வழியில் ஆசிரியர் காலனியில் உள்ளது இந்த காலனியில் ஏராளமான குடும்பங்கள் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர் வாலாஜா நகரில் பல வார்டுகளில்
குப்பை தொட்டிகள் இல்லை
காலனியில் பல வருடங்களாக குப்பை தொட்டி இல்லாத அவல நிலையாகவே உள்ளது. அப்பகுதி வாழ் மக்கள் குப்பைகளை எடுத்து சாலையில் கொட்டுவதால் குப்பைகள் எல்லாம் ஒரே இடத்தில் கூடாரமாக மாறி அதில் தண்ணீர் கலப்பதால் அதிலிருந்து ஈக்கள், கொசு, புழு போன்ற விஷ கிருமிகள் வருவதால் அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு அபாயம் உருவாகியுள்ளது .
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
