தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி உடனே மாற்ற வேண்டும் தனியார் பள்ளிகள் கோரிக்கை.

தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி உடனே மாற்ற வேண்டும் தனியார் பள்ளிகள் கோரிக்கை.

தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி உடனே மாற்ற வேண்டும் தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க அனைத்து மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருந்ததால்தான் துவக்க அனுமதி வழங்கிட  பரிந்துரைத்து அனுப்பிய 100 பள்ளிகளின் கோப்புகளுக்கு துவக்க அங்கீகாரம் வழங்காமல் ஆண்டுக் கணக்கில் வெறுமனே  வைத்துக்கொண்டு இருந்துவிட்டு மீண்டும் அந்த கோப்புகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி விட்ட தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி அவர்கள் தற்போது அங்கீகாரம் இல்லாத நர்சரி பிரைமரி பள்ளிகளை மூட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்.

 இவர் முதன்மை கல்வி அலுவலராக இருந்த போதுதான் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி சத்துணவு கூடம் தீப்பிடித்து எரிந்து 98 குழந்தைகள் தீயில் கருகிமாண்டு போனார்கள்.

அதற்குப் பின்னால் பொறுப்புக்கு வந்து இவர் இணை இயக்குனராய் தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் ஒரு பள்ளி கூட துவக்க அனுமதி கொடுத்தது கிடையாது. இவரால் யாரும் எந்தவித பயனும் எக்காலத்திலும் அடைய முடியாது. எனவே தான் இவரை அந்த பதவியில் இருந்தே மாற்றுங்கள் என்று நமது மாநில சங்கம்தொடர்ந்து தமிழக அரசை வற்புறுத்துகிறது.

 இவருக்கு முன்பு இருந்த இயக்குனர்கள் எல்லோரும் நூற்றுக்கணக்கான நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணை வழங்கி இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு நேரடியாக அமைச்சரின் கரங்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அமைச்சரின் வற்புறுத்தலால் உடனடியாக இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு இதற்கான முயற்சிகள் எதையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எடுக்கவில்லை இத்தனை நாட்கள் சும்மா இருந்துவிட்டு இப்போது திடீரென்று 7.5 .2021 என்கிற தேதி ஏற்று ஒரு அரசாணையை உடனடியாக வெளியிட்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக  பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கின்ற நிலையில் பல பள்ளி நிர்வாகிகளால் உரிய ஆவணங்களை தயார் செய்ய முடியாமல் 2021 பிப்ரவரி மார்ச் மாதங்களில் காலாவதியான அங்கீகார ஆணைகளை புதுப்பிக்க பல பள்ளி நிர்வாகிகள் தடுமாறி வருகின்றார்கள் இந்த நிலையில் எந்த பள்ளிக்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பாமல் உடனடியாக இப்படி ஆணையை வெளியிட்டிருப்பது நர்சரி பிரைமரி பள்ளிகள் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்

 இவர் இருக்கிற வரை தமிழகத்தில் தொடக்கக் கல்வி எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை..... எனவே உடனடியாக தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமியை மாற்றிட வேண்டும் என்று தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். என்று தமிழகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட பள்ளிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளன.