நாய்கள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. நடவடிக்கைஎடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்...?
சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையம் பேரூராட்சி கிழக்கு ஈஸ்வரன் கோவில் தெரு,
திரௌபதி அம்மன் கோவில் பின்புறம் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து இருந்தது .
சூறைக்காற்றில் விழுந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது இதுவரை பேரூராட்சி நிர்வாகம் அதை சரிசெய்து எரியவைக்க நடவடிக்கை எடுக்குமா? இந்த பகுதியில் தற்போது மர்மவிலங்கு கடித்து ஆடுகள் இறந்துள்ள நிலையில் மக்கள் மரணபீதியில் உள்ளனர்
இருட்டில் நாய்கள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. நடவடிக்கைஎடுக்குமா? வெளிச்சம் பாய்ச்சுமா? வேதனைதீருமா?
பரிதவிக்கும் மக்கள்.
