விரைவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மோடி போடும் அதிரடி திட்டம்...!
இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கு பின்னர் 2025ம் ஆண்டிற்குள் எனவும், 2023ம் ஆண்டிற்குள் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என முடிவாகியுள்ளது.
இந்த சூழலில் வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில், எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்றால், அதன் விலை குறைவாக இருப்பது அவசியம். வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைவாக இருந்தால், மக்கள் எந்த பெட்ரோலை வாங்குவார்கள்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதன் காரணமாகவே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அதிகளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமென்றால், வழக்கமான பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை குறைவாக இருப்பது அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
பெட்ரோலுடன் அதிகளவு எத்தனாலை கலக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதால், வரும் காலங்களில் எத்தனால் தேவை உயரும். எனவே முதலீட்டாளர்களை ஈர்க்க சிறப்பு முயற்சிகள் தேவை என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் எத்தனாலை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆங்காங்கே உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற ரீதியில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எத்தனாலை உற்பத்தி செய்யும் புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு முறையே இதற்கு காரணமாக உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை இந்த கோரிக்கைக்கு பலன் இல்லை. எனினும் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விலையை மத்திய அரசு குறைக்கும் என்று நம்பலாம். ஏனெனில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன கார் பைக் போன்ற இந்த வாகனங்கள் 2022ல் அனேகமாக விற்பனைக்கு வந்துவிடும் இதனால் பெரும்பான்மையாக பெட்ரோல்-டீசல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் அதனால் பெட்ரோல் டீசல் விலை பாதிக்கு பாதி குறையும் வாய்ப்பு உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு படுதோல்வி ஏற்பட்டது. இதற்கு காரணம் தேர்தல் சமயத்தில் உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை தான். இந்த நிலை வருகின்ற 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மோடி மிகவும் கவனமுடன் இருக்கிறார் எனவே அதற்குள் பெட்ரோல் டீசல் விலையை பாதிக்கு பாதி குறைப்பதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதற்காக நீங்கள் 2024 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை அடுத்த வருடமே இது நிகழலாம்....?!





