வேல் மருத்துவமனை சார்பில் அடிப்படை தூய்மை பணியாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வேல் மருத்துவமனை சார்பில் அடிப்படை தூய்மை பணியாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரத்தில் மக்கள் மத்தியில் நற்பெயர்பெற்றது வேல் மருத்தவமனை இம்மருத்துவமனை கேணிக்கரையில் அமைந்துள்ளது. வேல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் லீலாவதி சார்பில் 15 நாற்காலிகளையும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வழங்கினார். இதனையடுத்து மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு 200 நபர்களுக்கு 10 கிலோ கொண்ட அரசி பைகளையும் இன்று 11-6-2021 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மலையரசு வழங்கினார். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மலர் வண்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் உதவி நிலைய மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி|கொரோனா நோடல் அதிகாரி முதிலேஸ்வரன் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உடன் உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாக மருத்துவமனை முன் களிப்பணியாளர்களுக்கும் நலத்திட்டங்களை வேல் மருத்துவமனையின் சார்பில் மருத்துவர் மலையரசு வழங்கிவருகிறார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒலிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
