உயர் நீதிமன்றத்தை அவ மதிக்கிறதா பள்ளிக்கல்வித்துறை...? விஸ்வரூபம் எடுக்கும் கல்வி பிரச்சனை...!

 உயர் நீதிமன்றத்தை அவ மதிக்கிறதா பள்ளிக்கல்வித்துறை...? விஸ்வரூபம் எடுக்கும் கல்வி பிரச்சனை...!


 07.06.2021ஆம் நாளிட்ட பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களால் வெளியிடப்பட்ட செயல்முறைகள். நா.கா. எண். 34462/பி 1/இ 1/2021. அரசு பள்ளிகள் /அரசு நிதி பெறும் பள்ளிகளில் மட்டும் வருகின்ற 14ஆம் தேதி திறப்பதற்கு புதிய மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு பள்ளிக்கல்வி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் தனியார் சுயநிதி  பள்ளிகள் திறப்பது சம்பந்தமாகஒரு வார்த்தை கூட சொல்லாதது வருத்தமாக உள்ளது.

இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே ஆர் நந்தகுமார் தொடுத்த வழக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்டதாகும்.

சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி,  நீதிமன்றத்தின் படி பார்த்தால் இந்த ஆணையை தனியார் பள்ளிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து தான் பள்ளிக்கல்வி ஆணையர் ஆணை வெளியிட்டு இருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு என்று குறிப்பிட்டிருப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்

W. P. No.7299/2021. நாள். 22.03.2021 வழக்குப் போட்ட தனியார் பள்ளிகளுக்கு அந்த உரிமை வழங்காமல் அரசு பள்ளிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்கள்  ஆணை போட்டிருப்பது  ஒருண்ணுக்கு வெண்ணெய்ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது போல் உள்ளது. எனவே பாரபட்சமில்லாமல் அனைத்து வகை பள்ளிகளையும்  திறப்பதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.

இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை கவனத்தில் கொண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் திறப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.