*அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்*
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அனுப்பூர் கிராமம் பனந்தோப்பு என்ற இடத்தை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு கசிவு நீர்க் குட்டைகள் கட்டுப்பட்டு வந்தன தற்போது மூன்று காலம் மூன்று மாத காலமாக அதில் ஒரு கசிவு நீர்க் குட்டைகள் அனுப்பூர் துப்புரவு பணியாளர்கள் ஊரில் சேரும் குப்பைகளை தீ வைத்து எரிக்கிறார்கள் அது தொடர்ந்து புகைத்துக் கொண்டே இருக்கிறது இந்த புகையினால் அருகில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் கடும் துர்நாற்றமும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது பலமுறை பஞ்சாயத்து தலைவரிடமும் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் *அயோத்தியாபட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கே தீ வைத்து எரிக்க சொல்கிறார்கள்* என்று கூறுகிறார் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்
கொரோனாஎன்னும் கொடிய நோய்க்கு ஆளாகி உள்ள இந்த நேரத்தில் விவசாயத்தை நம்பி வாழ்வாதாரத்தை இழந்து உள்ள இந்த நேரத்தில். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பைகளை அதற்குண்டான கிடங்கில் வைத்து எரியூட்ட வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் கூறுகிறார்கள்.

