9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை -அமைச்சர் பொன்முடி

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை -அமைச்சர் பொன்முடி


தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  கூறியதாவது:-


பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்க்கை 11ம் வகுப்பு சேர்க்கை போலவே நடைபெறும்; 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இக்கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும்

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும.  எந்த அடிப்படையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்துவது என்று முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வரும் புகார்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தொடர்பான முடிவெடுக்கப்பட்ட பிறகு பி.இ, கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்.

அண்ணா பல்கலைக்கழக விருப்பப் பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும் என கூறினார்.