இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3% ஆக இருக்கும்
2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 2020-2021 முதல் மூன்று காலாண்டுகள் மோசமான சரிவை சந்தித்தது. 2021ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதம் சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத சரிவாகும் இது.இந்த நிலையில் இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது
. முன்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1% ஆக இருக்கும் என்று கணித்து இருந்த நிலையில் தற்போது இது 8.3% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது
. கடந்த நிதியாண்டில் இரண்டாம் பாதியில் இந்தியா பொருளாதார ரீதியாக மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இரண்டாம் அலையால் இது மீண்டும் சரிவை சந்தித்துள்ளது
. லாக்டவுன் காரணமாகவும், பொருளாதார நடவடிக்கைகள் நடக்காத காரணத்தாலும், இந்தியா மீண்டும் சரிவை நோக்கி சென்றுள்ளது. இந்தியாவின் 2021-2022 நிதியாண்டு வளர்ச்சி உள்கட்டமைப்பு, கிராம அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகியவை மீது கவனம் செலுத்துவதன் மூலம், அதிக தொகையை இதில் செலவு செய்வதன் மூலம் சரிவில் இருந்து மீள முடியும். மக்களின் வாங்கும் திறன் குறைவாக இருப்பதும், நம்பிக்கையின்மை காரணமாகவும் வளர்ச்சி பாதிப்பு அடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவின் வளர்ச்சி 2022-23ல் 7.5% ஆக இருக்க வாய்ப்புள்ளது. 2023-2024 நிதியாண்டில் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது. கார்ப்பரேட், உற்பத்தி துறையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்தியா பொருளாதார கொள்கைகளை துரிதப்படுவதன் மூலமும், திட்டங்களை வேகமாக செயல்படுத்துவன் மூலமும் இதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
. பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெறும் நிலையில் இதில் மாற்றங்கள் ஏற்படும் என்று உலக வங்கி கூறியுள்ளது.அதே சமயம் உலக பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.'
