காதல்னா இனிக்குது…கல்யாணம்னா கசக்குதா...? 7 மாத எஸ்கேப் பார்ட்டியை ஊரார் பிடித்துக் கொடுத்தனர்!
வாணியம்பாடி அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி பல ஆண்டுகளாக காதலித்து பலான மேட்டர்களையும் முடிந்த நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணை வாலிபர் கைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்நிலையில் 7 மாதத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த இளைஞரை கிராமமே ஒன்று சேர்ந்து வீட்டுச்சிறை வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.....
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த செந்தாமரை – அகிலா என்பவரின் மகள் பிரியங்கா. பட்டதாரியான இவர் அதே கிராமத்தில் உள்ள சேகர் என்பவரின் மகன் பட்டதாரி இளைஞர் விக்னேஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் இருவரும் காதலித்து வந்த நிலையில் பல இடங்களில் தனிமையில் இருந்து வந்துள்ளனர் இதனால் கர்ப்பமடைந்த பிரியங்கா திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். அப்போது என் வீட்டில் என் தந்தை மற்றும் உறவினர்கள் நீ மாற்று (பட்டியலினம்) சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது நான் கர்ப்பமாக உள்ளேன் என்று பிரியங்கா தெரிவித்ததை தொடர்ந்து விக்னேஷ் மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்து உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி மாத்திரையை உட்கொள்ள வைத்துள்ளார் இதனால் கருகலைப்பு அடைந்த பிரியங்கா வீட்டில் உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளார் அப்போது அவரது தந்தை செந்தாமரை மற்றும் அவரது உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் செய்தனர் கருகலைப்பு செய்யப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்ததை தொடர்ந்து பிரியங்காவுடன் அவரது தந்தை விசாரணை செய்ததில் விக்னேஷ் காதலித்து கர்ப்பம் ஆக்கிய ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார் அதை தொடர்ந்து கடந்த வருடம்1.8.2020 வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தந்தையுடன் சென்று பிரியங்கா விக்னேஷ் என்னை காதலித்து வந்ததாகவும் அவர்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று புகார் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலஷ்மி எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லைஇதனால் பிரிங்கா மனவேதனை அடைந்தார், இந்நிலையில் 8 மாதத்திற்கு முன்பு தலைமறைவான விக்னேஷ் இரவு ஊருக்குள் வந்துள்ளார். அப்போது அக்கிராம மக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் வீட்டின் முன்பு குவிந்து நியாயம் கேட்டனர்.
அப்போது அவரது தந்தை மற்றும் உறவினர்கள் விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியேறி விட்டனர் உடனடியாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், பூட்டிய வீட்டிற்குள் இருந்த விக்னேஷை கைது செய்தனர் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் திருமணம் செய்ய மறுத்த விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் 8 மாத காலமாக வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலம் தாழ்த்தி வந்ததாகவும் அவரை கைது செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அக்கிராம மக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

