"'வேலூரில் நகரில் ஊர் சுற்றியவர்களுக்கு ஆப்பு - 600 டூவீலர்கள் பறிமுதல்!!!!
வேலூர் மாவட்டத்தில், ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய, 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், ஊரடங்கை மதிக்காமல் வேலூர் மாவட்டத்தில் நிறைய பேர் பைக்குகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். இதனால் தேவையின்றி ஊர் சுற்றியவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்ய எஸ்.பி.செல்வகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர், காட்பாடி, சத்துவாச்சரி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூரில் ஊர் சுற்றிய 600 வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
செய்தியாளர் சுரேஷ்குமார்...
