வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் 5000 லிட்டர் சாராய ஊறல்,சாராய அடுப்புகள் மற்றும் மூலப்பொருட்கள் அழிப்பு

 வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் 5000 லிட்டர் சாராய ஊறல்,சாராய அடுப்புகள்  மற்றும் மூலப்பொருட்கள் அழிப்பு


மாவட்ட காவல் கண்காணி்பாளரின்  தனிப்படை போலீசார்  நடவடிக்கை 

வாணியம்பாடி,ஜூன்.30-

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மாவட்டத்தில் மணல் கொள்ளை, கள்ளசாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க தனிப்படை ஒன்றை அமைத்து அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களை தடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள கொர்ரிபள்ளம்  மலைப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காவல் உதவி ஆய்வாளர்  கணேசன், வாணியம்பாடி உட்கோட்ட தனிப்பிரிவு  உதவி ஆய்வாளர் பிரகாசம் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் இன்று மலைப்பகுதியில்   அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்குள்ள ஒரு மலையில் சாராயம் காய்சுவதை அறிந்து அங்கு சென்றனர்.போலீசார் வருவதை அறிந்த கள்ள சாராயம் காய்ச்சும் கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

பின்னர் அங்கு சென்ற தனிப்படை  போலீசார்

சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 5 சாராய அடுப்புகள் மற்றும் பேரல்களில்  நிரப்பி மண்ணில் புதைத்து வைத்திருந்த  5000 லிட்டர் சாராய ஊறல், 600 லிட்டர் கள்ள சாராயம்,4 டன் விறகு கட்டைகள், 100 கிலோ கடுக்காய் மூட்டைகளை அழித்தனர்.

போலீசார் வருவதை அறிந்து தப்பியோடிய சாராயம் கும்பலை சேர்ந்த நடராஜன்,பெருமாள், சின்னதம்பி உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.