50 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணி திறந்து வைத்தார்...

 50 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணி திறந்து வைத்தார்...


ராணிப்பேட்டை : ஜுன் 05 

வாலாஜாஅரசு  தலைமை  மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகளை கொண்ட கூடுதலான கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன், திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பும் நபர்களுக்கு உடல் பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்படும் , அலோபதி, சித்த மருத்துவம்  போன்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ பொருட்கள்  அடங்கிய தொகுப்பினை மருத்துவர்களின் விளக்கங்களோடு   அமைச்சர் பார்வையிட்டார்    அருகில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 

ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ், சார் ஆட்சியர் இளம்பகவத், நகராட்சி ஆணையாளர் சதீஷ், தலைமை மருத்துவர் உஷா நந்தினி, மருத்துவர் கீர்த்தி வாலாஜா நகர காவல் ஆய்வாளர் பாலு, மற்றும் திமுக கழக தொண்டர்கள் உடனிருந்தனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..