"""ராணிப்பேட்டை அருகே 4 இறைச்சி கடைகளுக்கு சீல்!!!
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்தநிலையில் ராணிப்பேட்டை அருகே உள்ள கல்மேல்குப்பம் கிராமத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி கடைகளை திறந்து, சிலர் வியாபாரம் செய்வதாக, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில், வாலாஜாபேட்டை தாசில்தார் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் கல்மேல்குப்பத்தில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் இறைச்சிக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த முகமதுஅலி (வயது 25), முகமது யாசர் அராபத் (27), மஜீத் (62) ஆகிய 3 பேரின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் தலா ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர் இதேபோல் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது, சிப்காட் பகுதியில் திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல் வைத்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்மேலும் ஊரடங்கின்போது வீணாக சுற்றி திரிந்த 10 மோட்டார் சைக்கிள்களையும் சிப்காட் போலிசார் பறிமுதல் செய்தனர். முக கவசம் அணியாத 14 பேருக்கு தலா ரூ.200 அபராதமும் விதித்தனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
