கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் விபத்து, 3 பேர் காயம்*

 கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் விபத்து, 3 பேர் காயம்


*கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சங்கீதா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.*

*ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண் சங்கீதா, மாமியார் ரோஸ், உறவினர்  இளையனார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி , ஆஷா பணியாளர் அமுதவல்லி ஆகியோர் இருந்தனர்.*

*கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்தூர் அருகே சென்ற போது, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.*

*இதில்  மூன்று பேர்  காயங்களுடன் உயிர் தப்பி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*

*கர்ப்பிணி பெண் சங்கீதா, பிரசவத்திற்காக  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.*