கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்*
*கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு செல்லப்பட்டார்.*
*கர்ப்பிணி பெண்ணுடன் அவரது மாமியார், நாத்தனார் ஆகியோர் இருந்துள்ளனர்.*
*ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்ஸின் டயர் வெடித்தால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.*
*இதில் ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.*
*உடன் மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில், கர்ப்பிணி பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கர்ப்பிணி பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார்.*
*மூன்று பேரின் உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.*
*மேலும் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பெண் உதவியாளர் படுகாயமடைந்தனர்.*
*அதிகாலை நடந்த இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*
*கர்ப்பிணி குடும்பத்துக்கு ₹5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்*
*கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமி குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிதி*
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

