3 ஆண்டுகளாக குடிநீர் இல்லை: ராணிப்பேட்டையில் காலிக்குடங்களுடன் மறியல்

 3 ஆண்டுகளாக குடிநீர் இல்லை: ராணிப்பேட்டையில் காலிக்குடங்களுடன் மறியல்


ராணிப்பேட்டை அருகே கடந்த 3 வருடங்களாக முறையாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கல்மேல்குப்பம் கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு மலைபகுதியில் உள்ள 7-வது வார்டில், கடந்த மூன்று வருடங்களாக பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கோடை காலம் என்பதால் கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திடீரென கல்மேல்குப்பம் அம்மூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உத்தரவாதத்தின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...