திருமண மண்டபங்கள், பெரிய அரங்குகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் - எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து*

திருமண மண்டபங்கள், பெரிய அரங்குகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் - எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து* 


அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், தமிழ்நாட்டில்  பிளஸ் 2  பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா, ரத்து செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இரண்டு நாளாக நடைபெற்றுவருகிறது. இதில் 60% கல்வியாளர்களும் பெற்றோர்களும் தேர்வை நடத்தலாம் என ஆதரவு தெரிவித்துள்ளதாக நேற்று (03.06.2021) தகவல்கள் வெளியாகின. இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரிடம் கருத்துக் கேட்பு தொடர்பான அறிக்கையை வழங்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ''தேர்வு நடத்தாமல் மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குழப்பங்களுக்கு வழிவகுக்கும். திருமண மண்டபங்கள், பெரிய அரங்குகள் சினிமா தியேட்டர் போன்றவற்றில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாம்'' என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த பிரச்சினைக்கும் வாய் திறந்து பேசாத அவர் பிளஸ் 2 தேர்வு நடத்தவேண்டும் என்று அடம்பிடித்து இருப்பது மோடிக்கு எதிராக நீ என்ன  வேண்டுமானாலும் செய் ராசா என்று ஊக்கப்படுத்துவது ஆகவே கருதப்படுகிறது.

போன வருஷம் எல்லாம் இவங்க எங்க போனாங்க...? இந்த ஐடியாவை அப்பவே கொடுத்து இருக்கலாம் இல்லையா எ...?எல்லாம் ஒரு அரசியல் விளையாட்டு தான்.