தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து? விரைவில் அறிவிப்பு வரலாம்!* பெற்றோர்கள் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது...

 *தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து? விரைவில் அறிவிப்பு வரலாம்!* பெற்றோர்கள் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது...


சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தள்ளதால், தமிழகத்திலும் மாநில பாடத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

. இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம்.100 ஆண்டுகளில் இல்லாத மோசமான தொற்று நோய் பாதிப்பை உலகம் சந்தித்துள்ளது. மொத்த உலகமும் கொரோனவின் கோரப்பிடியால் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.ஆக்சிஜனை தேடி உலகமே அலைகிறது. இந்த சூழலில் பள்ளிகளை நடத்த முடியாததால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

 கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்த பின்னர், கொரானா பரவல் இந்தியாவில் பரவ தொடங்கியதால், மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது,தேர்வு ஒத்திவைப்புஆனால் கொரோனா பரவலின் முதல் அலையே நவம்பரில் தான் ஓய்ந்தது. கொரோனாவின் 2வதுலை அடுத்த ஐந்த மாதத்தில் அதாவது மார்ச் மாதம் மீண்டும் உச்சம் பெற தொடங்கியது.

 இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுகளை தற்போதைய சூழலில் அடுத்த 3மாதங்களில் கூட நடத்துவது கடினமான சூழலே உள்ளது.,பிளஸ் 2 தேர்வு ரத்துஇந்நிலையில் கடந்த ஓராண்டாக கல்வி கற்க போதிய வாய்ப்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. 

மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி  வெளியிட்டுள்ளார்

.சிபிஎஸ்இ பிளஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் மாநில பாடத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் பள்ளி கல்வி அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் அண்மையில் கூறும் போது, மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் தேர்வை நடத்துவது குறித்து எடுக்கும் முடிவை பொறுத்தே தமிழக அரசும் எடுக்கும் என்று கூறினார்.

.எனவே தற்போது மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது. அதை பின்பற்றி எல்லா மாநிலங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் முடிவினை எடுக்கக்கூடும். அந்த வகையில் தான் தமிழகமும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு அரசின் சார்பாக எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

 ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பிளஸ் தேர்வும் செய்யப்பட உள்ளதால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

*தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்துகள் கேட்டு முடிவு - செய்யப்படும் என்று இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவை அறிவித்துள்ளார் .*.

மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள்,  பெற்றோர்கள்,  மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.