கல்வராயன் மலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் 2,700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு !
*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில்*
*கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் , திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியன் , வடபொன்பரப்பி காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் , மூங்கில்துறைப்பட்ட்டு தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார்கள் இன்று கல்வராயன் மலை அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தில் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.*
*அப்போது ஏழுமலை என்பவரின் வீட்டில் 500 கிலோ சர்க்கரை மூட்டையும், 400 கிலோ வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது*
*தொடர்ந்து தும்பராம்பட்டு ஆற்றில் செல்வராஜ் என்பவரின் 2,700 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்*
