சின்னசேலம் பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்த 223 மது பாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது*

சின்னசேலம் பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்த 223 மது பாட்டில்கள்  பறிமுதல், 2 பேர் கைது* 


*கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் பிரபாவதி ஆகியோர்  தலைமையிலான காவலர்கள் இன்று சின்னசேலம் அருகே உள்ள  கல்லாநத்தம் ,‌ பாண்டியன்குப்பம் , தகரை‌ ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.*

*அப்போது, சின்னசேலம் ரயில்வே பகுதியில் சாக்கு மூட்டையில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 38 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன* 

*தொடர்ந்து சின்னசேலம் அண்ணாநகர் பகுதியில் மதுக்கடை அருகே கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த  185  மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.*

*மேலும் இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட பாலாஜி , ரங்கசாமி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்*